×

சனாதன தர்மத்தைக் காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

 

சென்னை: சனாதன தர்மத்தைக் காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு என்ற புத்தகத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். பின்னர் உரையாற்றிய அவர்; ராமேஸ்வரம், காசி ஆகியவை ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொதுவானவை. ங்கிலேயர்கள் தனது ஆட்சிக் காலத்தில் சனாதன தர்மத்தை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டனர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது. ஜி.யு.போப் போன்றவர்கள் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றவே அவர்கள் இந்தியா வந்தனர்.

எனக்கு இயேசுவும் பிடிக்கும், பைபிளும் பிடிக்கும். சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் பாரதத்தில் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அந்த ஒற்றுமை கிழக்கிந்திய கம்பெனிக்கு சவாலாக இருந்தது. அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார். நாராயணனின் அவதாரம் அய்யா வைகுண்டர். வைகுண்டரின் கனவை நனவாக்கும் பணியில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார் இவ்வாறு கூறினார்.

The post சனாதன தர்மத்தைக் காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன் அய்யா வைகுண்டர் தோன்றினார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு appeared first on Dinakaran.

Tags : Ayya Vaikunder ,Governor RN ,Ravi ,Chennai ,Governor RN Ravi ,Governor ,R. N. Ravi ,Sri Vaikunda Swami ,Maha Vishnu ,
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!