×

உ.பி. பாஜக எம்பி இருப்பதாக ஆபாச வீடியோ வெளியானதால் பரபரப்பு; எதிரிகளின் சூழ்ச்சி என்று உபேந்திர சிங் ராவத் குற்றச்சாட்டு..!!

லக்னோ: உத்திரபிரதேசத்தில் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி. உபேந்திர சிங் ராவத் இருப்பது போன்ற ஆபாச காணொலி இணையத்தில் பரவியதையடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாரபங்கி தொகுதி எம்.பி.யான உபேந்திர சிங் ராவத்துக்கு அதே பகுதியில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளது. இந்நிலையில் பாஜக எம்.பி. உபேந்திர சிங், பெண் ஒருவருடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச காணொலி, இணையத்தில் வெளியாகி மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மீண்டும் எம்பி டிக்கெட் கிடைத்த மறுநாளே ஆபாச வீடியோ வைரலானது.

ஆனால் ஆபாச காணொலியில் இருப்பது தான் அல்ல என திட்டவட்டமாக மறுத்த உபேந்திர சிங், பாரபங்கியில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தமது எதிரிகள் செய்த சூழ்ச்சி என்று குற்றம்சாட்டியிருந்தார். இதையடுத்து எம்.பி.யின் தனிச்செயலாளர் அளித்த புகாரின் அடிப்படையில், அடையாமல் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகள் விரைவில் அடையாளம் காணப்படுவார்கள் என்றும் உத்திரப்பிரதேச காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அப்போதைய எம்.பி. பிரியங்கா சிங் ராவத்துக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுத்த பாஜக, உபேந்திர சிங் ராவத்தை வேட்பாளராக நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

The post உ.பி. பாஜக எம்பி இருப்பதாக ஆபாச வீடியோ வெளியானதால் பரபரப்பு; எதிரிகளின் சூழ்ச்சி என்று உபேந்திர சிங் ராவத் குற்றச்சாட்டு..!! appeared first on Dinakaran.

Tags : U. B. ,UBENDRA SINGH ,UBENDRA SINGH RAWAT ,BJP ,Lucknow ,Uttar Pradesh ,B. POLICE ,Barabanki Constituency M. B. Bharatiya ,Yana Ubendra Singh Rawat ,
× RELATED காங்கிரஸ் ஆட்சியில் கமிஷன்களுக்கு...