×

ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுகிறது என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், ராமநாதசுவாமி கோயில் மூலம் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் பக்தர்களின் வேண்டுகோளின் படியும், பக்தர்களின் வசதிக்காகவும் முன்னோர்களுக்கு பரிகார பூஜைகள் செய்திட கட்டண சீட்டுகள் நடைமுறைப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும், இது குறித்து ஆட்சேபனை ஏதும் இருப்பின் பொதுமக்கள் தங்களது ஆட்சேபனையினை வருகின்ற 20.03.2024 – க்குள் தெரிவிக்கும்படி நாளிதழ்களில் 28.02.2024 அன்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. நிர்வாகக் காரணங்களுக்காக இந்த அறிவிப்பு திரும்ப பெறப்படுகிறது என கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் செ.சிவராம்குமார் தெரிவித்துள்ளார்.

The post ராமநாதசுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் பரிகார பூஜைகள் செய்ய கட்டணச் சீட்டுகள் குறித்த அறிவிப்பு திரும்பப் பெறப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Ramanathaswamy temple ,Ramanathapuram ,Rameswaram ,District ,
× RELATED தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு...