×

போதையில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை

சென்னை: வண்டலூர் ஏரிக்கரை தெருவில் குடிபோதையில் ஏற்பட்ட மோதலில் மயிலாப்பூரைச் சேர்ந்த இளைஞர் சுமேஷ்(20) அடித்துக் கொலை செய்யப்பட்டார். மயிலாப்பூரை சேர்ந்த சுமேஷ், வண்டலூர் சென்று நண்பர் லோகேஷை சந்தித்தப்பின் நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். நண்பர்கள் 5 பேரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்திய நிலையில் போதை தலைக்கேறி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த லோகேஷ், தயாகரன் ஆகியோர் சவுக்கு கட்டையால் அடித்து சுமேஷை கொன்றுவிட்டு தப்பி ஓடி விட்டனர். போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி லோகேஷ், தயாகரன் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போதையில் தகராறு: இளைஞர் அடித்துக் கொலை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Sumesh ,Maylapur ,Vandalur Lake Street ,Vandalur ,Lokesh ,
× RELATED முதலீடு செய்யும் பணத்திற்கு 10 முதல் 11...