×

50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பழைய நிகழ்வுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில்

பெரணமல்லூர், மார்ச் 4: பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த, முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் பழைய நிகழ்வுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த முனுகப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த 1970-71ம் ஆண்டு ஓல்ட் எஸ்எஸ்எல்சி படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 40க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் சந்தித்து தங்களது கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக அவர்கள் பயின்ற வகுப்பறைகளுக்கு சென்று மலரும் நினைவுகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முன்னாள் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்து பெற்றுக் கொண்டனர்.

மேலும் முன்னாள் மாணவர்கள் சார்பில் பள்ளி சீரமைப்பு பணிக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்வதாக அப்போது உறுதி அளித்தனர். அதோடு வரும் காலங்களில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பள்ளி வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. காலை முதல் மாலை வரை நடந்த இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டனர்.

The post 50 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்திப்பு பழைய நிகழ்வுகளை பகிர்ந்து நெகிழ்ச்சி பெரணமல்லூர் அருகே அரசு பள்ளியில் appeared first on Dinakaran.

Tags : School ,Leschi Peranamallur ,Peranamallur ,Tiruvannamalai District ,Munukapatu Govt High… ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி