×

கட்டிட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், மார்ச் 4: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்டிட தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அன்புமணி, அரசு போக்குவரத்து கழக சம்மேளன மாநில செயலாளர் முருகராஜூ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கட்டுமான தொழிலாளர் நலவரி வசூல் சட்டங்களை கலைக்க கூடாது. மேலும், ₹6 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளர் குழந்தைகளின் முழு கல்வி செலவுகளையும் வாரியத்தில் இருந்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post கட்டிட தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : workers union ,Namakkal ,Namakkal District Collector's Office ,Tamil Nadu AITUC Building Workers Union ,Nandakumar ,Building Workers Union ,Indian Communist District ,Anbumani ,Construction Workers Union ,Dinakaran ,
× RELATED கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி;...