×

ஒன்றிய அரசு அளித்த அறிக்கையின் படி போதை பொருளில் குஜராத்துதான் முதலிடம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

நாமக்கல்: நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற தெற்கு வட்டார போக்குரத்து அலுவலகத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில், அரசு விரைவு போக்குவரத்துக்கழகங்களுக்கு ஓட்டுநர், நடத்துனர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு முடிவடைந்து, விரைவில் பணி நியமனங்கள் வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், தகுதிச்சான்று சான்றிதழ் போன்றவற்றை பதிவு தபால் மூலம் லாரி உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்களுக்கு அனுப்பப்பட உள்ளது.

இதில், ஏற்படும் பாதிப்புகள் குறித்து லாரி உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே, இதனை மாற்றி நேரடியாக உரிமையாளர்களுக்கு வழங்குவது குறித்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து நல்ல முடிவு எடுக்கப்படும். ஒன்றிய அரசு சமீபத்தில் அளித்த அறிக்கையில், போதைப்பொருள் பயன்பாட்டில் தமிழகம் கடைசி இடத்தில் உள்ளது. அதில், குஜராத் மாநிலம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த அறிக்கையை அறிந்து அவர்கள் பேச வேண்டும். போதைப்பொருட்கள் தொடர்பான புகாரில் தவறு செய்தவர்கள் மேல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசு அளித்த அறிக்கையின் படி போதை பொருளில் குஜராத்துதான் முதலிடம்: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Gujarat ,Minister Sivashankar ,Namakkal ,Tamil ,Nadu ,Minister ,Sivashankar ,South Regional Transport Office ,Tamil Nadu ,
× RELATED எதிர்க்கட்சி எம்பி என்பதால் ஒன்றிய...