×

பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு கோயிலில் கொடி மரம் முறிந்து விழுந்தது: பக்தர்கள் கடும் அதிர்ச்சி

காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் தர்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானத்துக்கு உட்பட்ட நள நாராயண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள பஞ்சமுக வீர ஆஞ்சநேயரை வழிபட தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வர்.

இந்நிலையில் இந்த கோயிலில் பிரமோற்சவ விழா கொடியேற்றம் நேற்று காலை 10.30 மணிக்கு நடந்தது. முன்னதாக கோயில் ஊழியர்கள், கொடிமரத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கொடியேற்றுவதற்கான கயிறு கட்டும் போது திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு தற்காலிகமாக ஒரு கொடிமரம் வைத்து கொடியேற்றினர். பிரமோற்சவ விழா கொடியேற்றத்தின்போது கொடிமரம் முறிந்து விழுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.

The post பிரமோற்சவ விழாவின்போது திருநள்ளாறு கோயிலில் கொடி மரம் முறிந்து விழுந்தது: பக்தர்கள் கடும் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thirunallaru temple ,Karaikal ,Nala Narayana Perumal Temple ,Karaikal District Thirunallar ,Darbaranyeswarar ,Devastanath ,Panchamuka Vera Anjaneyar ,Ikoil ,Thirunalaluru Temple ,Pramorasava Ceremony ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...