×

ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை

கேந்திரபாரா: தமிழ்நாட்டை சேர்ந்தவர் ராணுவ வீரர் ராஜ் சேகரன்(35). இவர் ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டம் மகாகல்பாடா காவல்நிலையத்துக்குள்பட்ட கியர்பங்கா கிராமத்தில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின்(டிஆர்டிஓ) வான் கண்காணிப்பு அலுவலகத்தில் நேற்று அதிகாலை பணியில் இருந்தார். அப்போது திடீரென்று தன்னிடம் இருந்த ரைஃபிளால் தன்னை தானே சுட்டு கொண்டார். ரத்த வௌ்ளத்தில் சரிந்த அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு ராஜ் சேகரன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியை பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை, இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறது.

The post ஒடிசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ராணுவ வீரர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Odisha ,Kendrapara ,Raj Sekaran ,Air Surveillance Office of the Defense Research and Development Organization ,TRDO ,Kyarbhanga village ,Mahakalpada ,Kendrapara district ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...