×

மார்ச் 10ல் ரயில் மறியல் விவசாயிகள் அறிவிப்பு

சண்டிகர்: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயிக்கக் கோரி டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தை விவசாயிகள் நடத்தி வருகின்றனர். அவர்களை பஞ்சாப்- அரியானா எல்லையில் தடுப்புகளை போட்டு போலீஸ் நிறுத்தியுள்ளனர். அங்கேயே தங்கி போராடி வரும் விவசாயிகள் மீது அரியானா போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், ரப்பர் தோட்டாக்களால் சுட்டும் வருவது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளதாக விவசாயிகள் நேற்று அறிவித்துள்ளனர். இதன்படி, வரும் 6ம் தேதி மீண்டும் டெல்லியை நோக்கி முன்னேற உள்ளதாக விவசாயிகள் சங்க தலைவர்கள் சர்வான் சிங்க பாந்தர், ஜக்ஜித் சிங் டாலேவால் ஆகியோர் தெரிவித்தனர். மேலும், 10ம் தேதி நாடு முழுவதும் ரயில் மறியல் நடக்கும் என்று அறிவித்தனர்.

The post மார்ச் 10ல் ரயில் மறியல் விவசாயிகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chandigarh ,Delhi ,Punjab-Aryana border ,Ariana ,
× RELATED சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம்; உச்ச...