×

சிறையில் இருப்பவரை ஜாமீனில் எடுக்கக்கோரி பெண்ணுக்கு மிரட்டல்: போலீசார் வழக்குப்பதிவு

 

மதுரை, மார்ச் 4: சிறையில் உள்ளவரை ஜாமீனில் எடுக்கக்கோரி, பெண்ணை மிரட்டிய மற்றொரு பெண் மீது கரிமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மதுரை, பெத்தானியாபுரம், அய்யனார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராதிகா (43). இவர் 2022ம் ஆண்டு வழக்கு ஒன்றில் கைதாகி மதுரை பெண்கள் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அப்போது, சக சிறைவாசியான மணிமேகலை என்பவருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. ராதிகா சிறையில் இருந்தபோது, மணிமேகலையை பார்க்க வந்தவர்களில் முரட்டான்பத்திரியை சேர்ந்த அனுசுயா (21) என்பவரும், அவருக்கு அறிமுகமாகியுள்ளார். ராதிகா சிறையில் இருந்தபோது மணிமேகலை அவ்வப்போது ஜாமீனில் வெளியே செல்வதும், மீண்டும் மற்றொரு வழக்கில் கைதாகி சிறைக்கு வருவதுமாக இருந்துள்ளார்.

இந்நிலையில், 2023 ஜூன் மாதம் ராதிகா ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து மணிமேகலையை ஜாமீனில் எடுக்கும்படி கூறி, அவரது நண்பர்கள் சிலர் ராதிகாவை மிரட்டியதாக கூறப்படுகிறது. இச்சூழலில் சமீபத்தில், அனுசுயா செல்போனில் ராதிகாவை அழைத்து மணிமேகலையை ஜாமீனில் எடுக்கும்படி கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, ராதிகா அளித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் அனுசுயா வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post சிறையில் இருப்பவரை ஜாமீனில் எடுக்கக்கோரி பெண்ணுக்கு மிரட்டல்: போலீசார் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Karimedu police ,Radhika ,Ayyanar Koil Street, Bethaniapuram, Madurai ,Dinakaran ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...