×

கராத்தே, சிலம்பம் போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல்

 

கோவை, மார்ச் 4: பள்ளி மாணவ, மாணவிகளுக்கான 12வது மாநில அளவிலான காராத்தே மற்றும் சிலம்பம் போட்டி கோவை ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. இதில் கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு பள்ளிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். பல்வேறு வயது பிரிவினர்களுக்கு நடந்த கராத்தே போட்டியில் சிறப்பாக விளையாடிய கார்த்திக் அகாடமி ஆப் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது.

இரண்டாம் இடத்தை ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியும், மூன்றாம் இடத்தை ஈக்விடாஸ் பள்ளியும், நான்காம் இடத்தை சிஎம்சி பள்ளியும் பெற்றது. சிலம்ப போட்டியில் ருத்ரன் சிலம்ப பள்ளி முதல் இடத்தையும், பாரதியார் சிலம்ப பள்ளி இரண்டாம் இடத்தையும், எஸ்.வி.ஆர் பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளை ஹயாஷிகா ஹா மற்றும் தி பைட்டர்ஸ் அகாடமியின் பயிற்சியாளர் ரமேஷ் குமார் வாழ்த்தினார்.

The post கராத்தே, சிலம்பம் போட்டியில் பள்ளி மாணவர்கள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,12th State Level Karate and Silambam Competition ,Sri Krishna Matriculation School ,Erode ,Tirupur ,Salem ,Nilgiris ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...