×

ஈரோட்டில் இன்று திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்.பி. கனிமொழி பங்கேற்கிறார்

 

ஈரோடு, மார்ச் 4: ஈரோட்டில் திமுக அரசின் சாதனைகள் மற்றும் பட்ஜெட் அறிக்கையினை விளக்கும் வகையில் இன்று (4ம் தேதி) மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று பேசுகிறார். ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான முத்துசாமி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கையினை விளக்கும் வகையில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ எனற தலைப்பில் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே இன்று (4ம் தேதி) மாலை 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் திமுக துணை பொது செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். எனவே, இந்த கூட்டத்தில் ஈரோடு தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு மற்றும அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சியினர் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

The post ஈரோட்டில் இன்று திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்: எம்.பி. கனிமொழி பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Erode ,M.P. ,Kanimozhi ,Erode South District ,DMK ,Minister ,Muthuswamy ,M.P. Kanimozhi ,Dinakaran ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...