×

மணிப்பூர் வன்முறையில் ஆயுதங்களை திருடிச்சென்ற 7 பேர் மீது குற்றப்பத்திரிகை: சிபிஐ தாக்கல்

புதுடெல்லி: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி இனக்கலவரம் வெடித்தது. இதில் பலியான பலரின் சடலங்களை சூரசந்த்பூரில் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய பழங்குடியின மக்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது மற்றொரு தரப்பினர் அப்பகுதி நோக்கி பேரணி சென்ற போது மீண்டும் கலவரம் வெடித்தது.

இதில், பிஷ்ணுபூர் மாவட்டம் நரன்செய்னாவில் உள்ள ரிசர்வ் பட்டாலியன் தலைமையகத்தின் 2 அறைகளில் இருந்த பல்வேறு ரக துப்பாக்கி, கையெறி குண்டுகள் என 300 ஆயுதங்கள் மற்றும், 9,000 தோட்டா உட்பட 19,800 வெடிபொருட்களை கும்பல் திருடிச் சென்றது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் நிலையில், இதில் குற்றம்சாட்டப்பட்ட ரோமோஜித் மெய்தி உள்ளிட்ட 7 பேர் மீது அசாம் கவுகாத்தியில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

The post மணிப்பூர் வன்முறையில் ஆயுதங்களை திருடிச்சென்ற 7 பேர் மீது குற்றப்பத்திரிகை: சிபிஐ தாக்கல் appeared first on Dinakaran.

Tags : CBI ,Manipur ,New Delhi ,Surasandpur ,Dinakaran ,
× RELATED மதுபான கொள்கை வழக்கில்...