×

போலீசாருக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு: எஸ்பி தலைமையில் நடந்தது

தேனி, மார்ச் 3: தேனி மாவட்டத்தில் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் முதல் நிலை காவலர், முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை உள்ள பணியிடங்களுக்கு நேற்று இட மாறுதல் கலந்தாய்வு நடந்தது.

ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட அளவில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் பணிபுரியும் காவலர்களில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்களை பணியிடம் மாறுதல் செய்வதற்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு முகாம் நடந்தது. மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தலைமை வகித்தார். கூடுதல் போலீஸ் எஸ்பி விவேகானந்தன் முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்ட அளவில் 425 போலீசார் கலந்து கொண்டனர். முகாமில் கலந்து கொண்ட காவலர்கள் தங்களுக்கு விருப்ப இடங்களை தேர்வு செய்து விண்ணப்பித்தனர். விண்ணப்பதாரர் கோரிய இடம் காலியாக இருந்தால் உடனடியாக பணி மாறுதல் வழங்குவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது காலியிடம் இல்லாத நிலையில் வேறு வாய்ப்புகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது.

The post போலீசாருக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு: எஸ்பி தலைமையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : SP ,Theni ,Dinakaran ,
× RELATED தேனியில் தபால் ஓட்டுக்கான...