×

நூலகத்திற்கு புத்தகம் வழங்கல் துடியலூர் ரயில் நிலையத்தில் 6,500 மரக்கன்றுகள் நடப்பட்டன

கோவை,மார்ச்3: கோவை  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சென்னை டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி, ஹெச்.சி.எல். பவுண்டேஷன், சிறுதுளி ஆகியவை இணைந்து துடியலூர் ரயில் நிலையத்தில் காடு வளர்ப்புத் திட்டத்தை செயல்படுத்தியது. டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி முதல்வர் முனைவர் சந்தோஷ்பாபு நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து, காடு வளர்ப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து “மியாவாக்கி” முறையில் 6,500 மரக்கன்றுகள் அங்கு நடப்பட்டன.

இதில்  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் மாணவர்கள், சமூகப்பணியியல் துறை மாணவர்கள், டி.ஜி. வைஷ்ணவ் கல்லூரி மாணவர்கள், ஹெச்.சி.எல். பவுண்டேஷன் நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில்  ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், சிறுதுளி அமைப்பின் அறங்காவலர் ஜெயசதீஷ், ஒருங்கிணைப்பாளர்கள்சந்திரசேகர், கிருஷ்ணசுவாமி, சிறுதுளி அமைப்பின் உறுப்பினர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் முனைவர் பிரகதீஸ்வரன்,சுபாஷினி, முனைவர் நாகராஜன், முனைவர் பிரவீன், முனைவர்சஹானா பாத்திமா, சமூகப்பணியியல் துறைத்தலைவர் பிரியதர்ஷினி ஆகியோர் செய்திருந்தனர்.

The post நூலகத்திற்கு புத்தகம் வழங்கல் துடியலூர் ரயில் நிலையத்தில் 6,500 மரக்கன்றுகள் நடப்பட்டன appeared first on Dinakaran.

Tags : Dudiyalur railway station ,Coimbatore ,Ramakrishna College of Arts and Science ,Chennai ,DG Vaishnav College ,HCL ,Sirutuli ,D.G. Vaishnav College ,Principal ,Dr. ,Santhoshbabu ,
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா