×

மணப்பாறையில் டூ வீலர் திருடிய வாலிபர் கைது

மணப்பாறை, மார்ச் 3: மணப்பாறையில் இருசக்கர வாகனம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். மணப்பாறை அடுத்த கிழக்கு நாகம்மாள் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (63). இவர் கடந்த 23ம்தேதி இரவு தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் திருட்டு போனதாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் இன்ஸ்பெக்டர் சீனிபாபு தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சேதுரத்தினபுரத்தை சேர்ந்த செந்தில்குமார் மகன் வசந்தகுமார்(23) என்பவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். அவரை சந்தேகத்தின்பேரில் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில் மன்னார்குடியை சேர்ந்த சரவணன் என்பவருடன் சேர்ந்து குணசேகரனின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. பின்னர் வசந்தகுமாரை கைது செய்து சிறையிலடைத்தனர்.

The post மணப்பாறையில் டூ வீலர் திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Sandbar ,Manapara ,Gunasekaran ,East Nagammal Street ,Caspian ,Dinakaran ,
× RELATED வையம்பட்டி அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.1.21 லட்சம் பறிமுதல்