×

ஜாம்நகர் ஏர்போர்ட் விவகாரம்; தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி அரசு உதவும்: காங். விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசானது பணக்கார தொழிலதிபர்களுக்கு மட்டுமே உதவி செய்கிறது என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைதள பக்கத்தில், தனது பணக்கார தொழிலதிபர் நண்பர்களுக்கு உதவுவது என்றால் பிரதமர் மோடி எதையும் செய்வதற்கு தயாராக இருக்கிறார். அவர் ஜாம்நகர் விமான நிலையத்தை 10 நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக அறிவித்துள்ளார்.

ஜாம்நகர் விமான நிலையம் பாகிஸ்தான் எல்லைக்கு மிக அருகில் உள்ளது. ஆனால் திருமண விருந்தினர்களுக்கான தனியார் ஜெட்கள் இந்திய விமான படையின் தொழில்நுட்ப பகுதியை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளன. வரி செலுத்துவோரின் பணத்தை பயணிகள் முனையத்தின் அளவை இரட்டிப்பாக்குவதற்கு உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post ஜாம்நகர் ஏர்போர்ட் விவகாரம்; தொழிலதிபர்களுக்கு மட்டுமே மோடி அரசு உதவும்: காங். விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : Jamnagar Airport ,Congress ,New Delhi ,Modi ,General Secretary ,Jairam Ramesh ,Dinakaran ,
× RELATED முகேஷ் அம்பானி வீட்டு திருமண...