×

பழைய நினைப்புல… உளறி கொட்டிய பாஜ துணைத்தலைவர்

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், ஒன்றிய அரசின் பாரத் அரிசி திட்டத்தை தொடங்கி வைத்த பாஜ மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜ வெற்றி பெறும். அந்த வகையில் திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியிலும் வெற்றியை பறிப்போம் என தனது பாணியில் அலப்பறையை துவங்கினார்.

நிச்சயம் வெற்றி பெறும் என மறுபடியும் தெரிவித்தார். இவர், ஏற்கனவே சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொகுதி மறுசீரமைப்பில் தற்போது திருச்செங்கோடு எம்.பி. தொகுதி இல்லாத போதிலும், நாமக்கல்லுக்கு பதிலாக திருச்செங்கோடு என குறிப்பிட்டது அங்கிருந்தவர்களை திகைக்க வைத்தது.

The post பழைய நினைப்புல… உளறி கொட்டிய பாஜ துணைத்தலைவர் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Namakkal district ,BJP ,State Vice President ,KP Ramalingam ,Union Government ,Tamil Nadu ,Thiruchengode ,vice-president ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து