×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம் 

தும்கா: ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி வங்க தேசத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் ஜார்கண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு அவர்கள் தும்கா மாவட்டத்தை வந்தடைந்துள்ளனர். அன்றிரவு குருமாஹட் பகுதியில் தற்காலிக கூடாரம் அமைத்து தம்பதி தங்கியிருந்ததாக தெரிகின்றது. அப்போது உள்ளூரை சேர்ந்த சுமார் 7 அல்லது 8 வாலிபர்கள் கூடாரத்தில் தங்கியிருந்த ஸ்பெயின் நாட்டு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

தடுக்க முயன்ற அவரது கணவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. இதன் பின்னர் மீட்கப்பட்ட அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஜார்க்கண்ட் மாநிலத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணி கூட்டு பாலியல் பலாத்காரம்  appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Dumka ,Bangladesh ,Tumka district ,Kurumahat ,Dinakaran ,
× RELATED ஒரு தலைக்காதல் வழக்கு; மாணவியை...