×

இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை

நியூயார்க்: அமெரிக்காவில் முனைவர் படிப்பு படித்து வந்த இந்திய நடன கலைஞர் அமர்நாத் கோஷ் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் அமர்நாத் கோஷ்(34). பரத நாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட இந்திய பாரம்பரிய நடனங்களில் தேர்ச்சி பெற்றவரான அமர்நாத் கோஷ் தன் நடன கனவுகளை பட்டை தீட்ட அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.

அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் உள்ள வாஷிங்டன் பல்கலைகழகத்தில் முனைவர் படிப்பு படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு செயிண்ட் லூயிஸ் பயிலரங்கம் அருகே நடைபயிற்சி சென்று கொண்டிருந்த அமர்நாத் கோஷ் மர்ம நபர் ஒருவரால் தாக்கப்பட்டு, சுட்டு கொல்லப்பட்டார்.

The post இந்திய நடன கலைஞர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : US New York ,Amarnath Ghosh ,America ,Kolkata, West Bengal ,
× RELATED நெஸ்லே குழந்தைகள் உணவில் அதிக...