×

வெலிங்டன் டெஸ்ட்; நியூசிலாந்துக்கு 369 ரன் இலக்கு

வெலிங்டன்: ஆஸ்திரேலிய அணியுடனான முதல் டெஸ்டில், நியூசிலாந்து அணிக்கு 369 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேசின் ரிசர்வ் மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசி. முதலில் பந்துவீச… ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 383 ரன் குவித்து ஆல் அவுட்டானது. கிரீன் ஆட்டமிழக்காமல் 174 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 179 ரன்னுக்கு சுருண்டது. பிலிப்ஸ் 71, ஹென்றி 42, பிளண்டெல் 33 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

204 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கி ஆஸி. 2வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 13 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த 3வது நாள் ஆட்டத்தில் அந்த அணி 51.1 ஓவரில் 164 ரன் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. லயன் 41, கிரீன் 34, ஹெட் 29, கவாஜா 28 ரன் எடுத்தனர்.

நியூசி. தரப்பில் பிலிப்ஸ் 5 விக்கெட் அள்ள, ஹென்றி 3, சவுத்தீ 2 விக்கெட் கைப்பற்றினர். இதைத் தொடர்ந்து, 369 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 3வது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 111ரன் எடுத்துள்ளது. லாதம் 8, யங் 15, வில்லியம்சன் 9 ரன்னில் வெளியேறினர். ரச்சின் ரவிந்திரா 56 ரன், டேரில் மிட்செல் 12 ரன்னுடன் களத்தில் உள்ளனர். ஆஸி. பந்துவீச்சில் லயன் 2, ஹெட் ஒரு விக்கெட் எடுத்தனர். கைவசம்7 விக்கெட் இருக்க, இன்னும் 258 ரன் தேவை நிலையில் நியூசிலாந்து இன்று 4வது நாள் சவாலை சந்திக்கிறது.

The post வெலிங்டன் டெஸ்ட்; நியூசிலாந்துக்கு 369 ரன் இலக்கு appeared first on Dinakaran.

Tags : Wellington Test ,Zealand ,Wellington ,New Zealand ,Basin Reserve Ground ,Newsey ,Australia ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில்...