×

மகளிர் போக்குவரத்து காவலர்களுக்கு 5 இடங்களில் பயோ-டாய்லெட்: ஆணையர் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 3: சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னை காவல் துறையில் பணியாற்றும் பெண் போக்குவரத்து காவலர்களின் நலன் கருதி, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை சந்திப்பு, விவேகானந்தர் இல்லம், பல்லவன் சந்திப்பு, ஆடம்ஸ் பாயிண்ட் (நேப்பியர் பாலம்) ஆகிய 5 இடங்களில் பயோ டாய்லெட் திறக்கப்பட்டுள்ளது. சில தொண்டு நிறுவனங்கள் மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கழிப்பறையில் ஒரு முறை தண்ணீர் நிரப்பினால் 3 நாட்கள் பயன்படுத்தலாம். மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்தால் போதுமானது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தால் சாலையில் காவலர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை சரி செய்வதற்கும், அவர்களுக்கு தேவையான உதவிகள் மேற்கொள்ளவும் சென்னை காவல் துறை கோடை காலங்களில் சோலார் தொப்பி, தண்ணீர், மோர் வசதியும் ஏற்பாடு செய்துள்ளோம்.

இந்த முயற்சியின் நோக்கம், பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிப்பதும், நீண்ட பணி நேரத்தில் அவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதும் ஆகும். முதற்கட்டமாக 5 இடங்களில் பயோ டாய்லெட் இருந்து வைக்கப்பட்டுள்ளது. வெகுவிரைவில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் திறக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்தார். சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர், போக்குவரத்து வடக்கு மண்டல இணை ஆணையர் தேவராணி, தெற்கு மண்டல இணை ஆணையர் மகேஷ் குமார், துணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர் பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

The post மகளிர் போக்குவரத்து காவலர்களுக்கு 5 இடங்களில் பயோ-டாய்லெட்: ஆணையர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Police Commissioner ,Sandeep Rai Rathore ,
× RELATED விஜயகாந்த் நினைவிடத்திற்கு போலீஸ்...