×

ஊத்துக்கோட்டை அருகே மண் லாரி மோதி ஐயப்ப குருசாமி பலி

ஊத்துக்கோட்டை, மார்ச் 3: ஊத்துக்கோட்டை அருகே மண் லாரி மோதி ஐயப்ப குருசாமி பரிதாபமாக பலியானார். ஊத்துக்கோட்டை ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன்(65), எலக்ட்ரீஷியன் வேலை செய்கிறார். முன்னாள் கவுன்சிலர் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்து சபரிமலைக்கு அழைத்துச்செல்லும் குருசாமி ஆவார். இவர் நேற்று காலை தனது மொபட்டில் வேலைக்கு செய்வதற்காக பாலவாக்கம் நோக்கி சென்றார். அப்போது தொம்பரம்பேடு பகுதியில் இருந்து சவுடுமண் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இவரின் பின்னால் மோதியது. இதில் குணசேகரன் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று குணசேகரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் பலியான குணசேகரனுக்கு யசோதா(65) என்ற மனைவியும், மணிகண்டன், நவின்குமார் என்ற 2 மகன்களும் உள்ளனர்.

The post ஊத்துக்கோட்டை அருகே மண் லாரி மோதி ஐயப்ப குருசாமி பலி appeared first on Dinakaran.

Tags : Ayyappa Guruswamy ,Uthukottai ,Oothukottai ,Ayyappa Kuruswamy ,Gunasekaran ,Oothukottai Reddy Street ,Guruswamy ,Ayyappa ,Sabarimala ,
× RELATED ஊத்துக்கோட்டையில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் திறப்பு