ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் மீன் அங்காடி கட்டித்தர வேண்டுமென மீன் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் ஆடு, கோழி, மீன், நண்டு உள்ளிட்ட இறைச்சி போன்றவை வாங்க வேண்டுமென்றால் பழைய பேரூராட்சி அலுவலகம் பின்புறம் உள்ள இறைச்சி கடைகளுக்கு வரவேண்டும்.
இதுமட்டுமல்லாமல் தாராட்சி, ஆலங்காடு, தாமரைகுப்பம், போந்தவாக்கம், பெரிஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இங்கு வந்துதான் இறைச்சி, மீன்களை வாங்கிச்செல்வார்கள். இந்நிலையில், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் கட்டிக்கொடுக்கப்பட்ட இறைச்சி கடைகளில் ஆடு, கோழி கடைகள்தான் உள்ளது.
மீன் வியாபாரிகளுக்கு கடைகள் இல்லை. எனவே மீன் வியாபாரிகளுக்கு கடைகள் கட்டித்தர வேண்டும் என ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற திட்ட நிகழ்ச்சியில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால், இன்னும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post ஊத்துக்கோட்டையில் மீன் அங்காடி இல்லாமல் வியாபாரிகள் திண்டாட்டம் appeared first on Dinakaran.