×

மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

பொன்னேரி, மார்ச் 3: 2024 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மீஞ்சூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் நடைபெற்றது. மீஞ்சூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை சுமூகமாக நடத்துவது, பொதுக்கூட்ட இடங்கள், தெருமுனை கூட்ட இடங்கள், பிரச்சார அனுமதிகள், காவல்துறை ரோந்து பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜ உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

The post மீஞ்சூர் காவல் நிலையத்தில் அனைத்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Meenjoor Police Station ,Ponneri ,2024 parliamentary elections ,Kaliraj ,Meenjur ,Crime ,Branch ,Inspector ,Senguttuvan ,
× RELATED சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை: டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தகவல்