×

தெருவில் கிடந்த செல்போனை ஸ்டேஷனில் ஒப்படைத்த சிறுவன்

குமாரபாளையம், மார்ச் 3: குமாரபாளையம் தம்மண்ணன் வீதியைச் சேர்ந்த சந்திரசேகரின் மகன் ஜெய்வந்த்(14). இவன் நேற்று முன்தினம் மாலை, பட்டத்தரசியம்மன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது, தெருவில் ஒரு செல்போன் கிடந்ததை கண்டான். அதனை பத்திரமாக எடுத்த ஜெய்வந்த், யாராவது தேடுகிறார்களா என பார்த்தான். யாரும் வராததால் அந்த செல்போனை குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தான். சுமார் ₹22 ஆயிரம் மதிப்பிலான அந்த செல்போனை போலீசில் ஒப்படைத்த சிறுவனை பாராட்டிய போலீசார், விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த செல்போன் காஸ் கம்பெனியில் பணியாற்றும் சரவணன் என்பவருக்கு சொந்தமானது என்றும், அந்த வழியாக சிலிண்டர் சப்ளைக்காக சென்ற போது தவற விட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், சிறுவன் கையாலேயே ஒப்படைத்தனர். சிறுவனின் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்த போலீசார், ₹200 வெகுமதி அளித்து அனுப்பி வைத்தனர்.

The post தெருவில் கிடந்த செல்போனை ஸ்டேஷனில் ஒப்படைத்த சிறுவன் appeared first on Dinakaran.

Tags : Kumarapalayam ,Jayavant ,Chandrasekhar ,Thammannan Road, Kumarapalayam ,Bhattarasiyamman Temple ,Jaywant ,Dinakaran ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...