×

சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோவில் கைது காட்பாடி அருகே காதலிப்பதாக கூறி

வேலூர், மார்ச் 3: காட்பாடி அருகே காதலிப்பதாகவும், திருமணம் செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய 2 வாலிபர்களை ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரும் வேலூர் கன்சால்பேட்டை இந்திரா நகரை சேர்ந்த ஏழுமலை(24) என்பவரும் காதலித்து வந்தனர். அப்போது, சிறுமியை திருமணம் செய்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்தாராம். அப்போது ஏழுமலைக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது சிறுமிக்கு தெரியவந்தது. இதனால் அவருடன் இருந்த தொடர்பை சிறுமி துண்டித்தார்.

இதற்கிடையில் காட்பாடி அடுத்த வள்ளிமலையை சேர்ந்த ஐயப்பன்(34) என்பவருக்கும், சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஐயப்பன், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி தனது அத்தை வீட்டுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்தாராம். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய் அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளார். அப்போது சிறுமி கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாய் இதுகுறித்து சிறுமியிடம் விசாரித்தார். அப்போது அந்த சிறுமி நடந்த விவரங்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வாசுகி ‘போக்சோ’ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து ஏழுமலை மற்றும் ஐயப்பனை நேற்று முன்தினம் கைது செய்தார். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post சிறுமியை கர்ப்பமாக்கிய 2 பேர் போக்சோவில் கைது காட்பாடி அருகே காதலிப்பதாக கூறி appeared first on Dinakaran.

Tags : Bokso ,Katpadi ,Vellore ,Gadpadi ,Gadpadi, Vellore district… ,Dinakaran ,
× RELATED வேலூர் காட்பாடி சாலையில் கழிவுநீர் கால்வாய் அடைப்பால் மக்கள் அவதி