×

அதிமுகவில் சேர்ந்த நடிகை காயத்ரிக்கு மகளிர் அணியில் பதவி

பாஜவில் மாநில துணை செயலாளராக இருந்த நடிகை காயத்ரி ரகுராம், அண்ணாமலையுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் கடந்த சில மாதங்களாக அண்ணாமலைக்கு எதிராக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார். பின்னர் திடீரென்று அண்ணாமலைக்கு ஆதரவாக இருந்ததாக, மோடி மீதும் குற்றச்சாட்டுக்களை கூறி வந்தார். இந்தநிலையில் திடீரென்று அவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மகளிர் அணி துணைச் செயலாளராக நடிகை மற்றும் நடன இயக்குநர் காயத்ரி ரகுராம் நியமிக்கப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

The post அதிமுகவில் சேர்ந்த நடிகை காயத்ரிக்கு மகளிர் அணியில் பதவி appeared first on Dinakaran.

Tags : Gayathri ,AIADMK ,Gayatri Raghuram ,BJP ,Annamalai ,
× RELATED எப்படியெல்லாம் பொய் பேசுவாங்கனு 10...