×

ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு; கிராமிய விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டு சிறை

துபாய்: கிராமிய விருது வென்ற ஈரான் பாடகருக்கு 3 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து ஈரான் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஈரான் அரசு கடந்த 2022ம் ஆண்டு ஹிஜாப் அணிவதை கட்டாயடமாக்கி சட்டம் கொண்டு வந்தது. அப்போது மஹசா அமினி என்ற இளம்பெண் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று கூறி ஈரான் காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

அங்கு காவலர்கள் நடத்திய தாக்குதலில் மஹசா அமினி உயிரிழந்தார். இதைதொடர்ந்து அங்கு பெண்கள் மாபெரும் போராட்டங்களை நடத்தினர். இசை மற்றும் பாடலில் சிறந்து விளங்குபவர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிக உயரிய விருதை, அண்மையில் ஈரான் பாடகர் ஷெர்வின் ஹாஜிபூர் வென்றார்.

இந்நிலையில் ஷெர்வின் ஹாஜிபூரின் பாடல்கள் மஹசா அமினியின் உயிரிழப்பை தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஈரான் நீதிமன்றம் ஷெர்வின் ஹாஜிபூருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று உத்தரவிட்டது.

The post ஈரான் போராட்டத்துக்கு ஆதரவு; கிராமிய விருது வென்ற பாடகருக்கு 3 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Iran ,DUBAI ,Mahasa Amini ,Gramiya ,
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்