×

பாஜக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு

மதுரை: வெல்லம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள் என்று பிரதமர் மோடியின் பேச்சு குறித்து செல்லூர் ராஜு காட்டமாக விமர்சித்துள்ளார். மதுரையில் அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு; வெல்லம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். வெல்லம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள்; விஷம் கொடுத்து கொல்பவர்களும் இருக்கிறார்கள். அதிமுக தலைவர்களை உயர்த்தி பேசினால் பாஜகவுக்கு வாக்கு கிடைக்கும் என பிரதமரே நினைக்கிறார் . பாஜக கார்ப்பரேட் கம்பெனிகளுக்கானது; ஏழைகளுக்கானது அல்ல.

ஒன்றிய பாஜக ஆட்சியில் விலைவாசி உயர்வு விண்ணை எட்டியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் கொடுப்போம் என்று பிரதமர் கூறினார். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.15 லட்சம் தருவோம், வேலைவாய்ப்பு தருவோம் என்றார்கள்; ஆனால் பாஜக எதுவுமே செய்யவில்லை. தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்புக்கு நிவாரணம் தர ஒன்றிய அரசுக்கு மனமில்லை. தமிழ்நாட்டின் வளர்ச்சியை தேசியக் கட்சிகள் புறக்கணிக்கின்றன. தமிழர் உரிமை முக்கியம் என்று பாஜக கூட்டணியை முறித்து தைரியமாக எடப்பாடி முடிவு எடுத்துள்ளார் இவ்வாறு கூறினார்.

The post பாஜக ஆட்சியை அகற்ற மக்கள் தயாராகிவிட்டனர்: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு appeared first on Dinakaran.

Tags : BJP ,Adimuga ,former minister ,Cellur Raju ,MADURAI ,PRIME ,MINISTER ,MODI ,Celluor Raju ,Adimuga Lawyers Division ,Madura ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக அடிக்கடி தமிழகம் வரும்...