×

மோடியின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம்

மணப்பாறை: மோடி மிரட்டினால் அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். திருச்சி மாவட்டம் மணப்பாறையில் கலைஞர் சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமை வகித்து பேசியது:

புயல், வெள்ளம் தாக்கிய போது, மீனவர்கள் இறந்த போது, நீட் தேர்வால் 22 மாணவ, மாணவிகள் இறந்த போது வராத மோடி ஏன் இப்போது அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்கிறார் என்றால் தேர்தல் வந்து விட்டது என்று அர்த்தம். திமுகவை அழிப்பேன், ஒழிப்பேன் என்று பிரதமர் மோடி சொல்கிறார். மோடி மிரட்டினால் அடிபணிய இது அதிமுக அல்ல. அண்ணாவின் தி.மு.க. அண்ணா உருவாக்கிய தமிழ்நாடு. மோடியின் மிரட்டல் எல்லாம் இங்கு செல்லுபடியாகாது. இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார். விழாவில் கலைஞர் சிலையை திறந்து வைத்து திக தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

The post மோடியின் மிரட்டலுக்கு அடிபணிய நாங்கள் அதிமுக அல்ல: அமைச்சர் அன்பில் மகேஷ் ஆவேசம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Modi ,Minister ,Anbil Mahesh Awesam ,Manaparai ,Anbil Mahesh ,Manaparai, Trichy district ,
× RELATED சொல்லிட்டாங்க…