×

பிரதமரை மம்தா சந்தித்த நிலையில் லட்சத்தீவிற்கு ெசல்லும் மோடிக்கு மணிப்பூர் ெசல்ல நேரமில்லையா?: திரிணாமுல் தலைவர்கள் காட்டம்

கொல்கத்தா: பிரதமர் மோடியை முதல்வர் மம்தா சந்தித்த நிலையில், லட்சத்தீவிற்கு ெசல்லும் மோடிக்கு மணிப்பூர் ெசல்ல நேரமில்லையா? என்று திரிணாமுல் தலைவர்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர். மேற்குவங்க மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி கொல்கத்தா வந்தார். ஹூக்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, சந்தேஷ்காளி விவகாரத்தை முன்வைத்து முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான மேற்கு வங்க அரசை தாக்கிப் பேசினார். இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஆளுநர் மாளிகைக்குச் சென்றார். அங்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மம்தா கூறுகையில், ‘மேற்குவங்க மாநில விவகாரங்கள் குறித்து பிரதமரிடம் விவாதித்தேன்’ என்றார்.

இந்நிலையில் சந்தேஷ்காளி சம்பவம் குறித்து பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு, ஆளும் திரிணாமுல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மேற்குவங்க பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஷஷி பஞ்சா கூறுகையில், ‘பெண்களுக்கு எதிரான கொடுமைகள் பற்றி பிரதமர் பேசுகிறார். ஆனால் மணிப்பூர் பெண்களின் பாதிப்பு குறித்து அவர் ஏன் வாய் திறக்கவில்லை?’ என்றார். அதேபோல் திரிணாமுல் செய்தித் தொடர்பாளர் சாந்தனு சென் கூறுகையில், ‘லட்சத்தீவிற்கு செல்லும் பிரதமர் மோடி, மேற்குவங்கத்தின் அருகில் உள்ள மணிப்பூருக்கு செல்ல அவருக்கு ஏன் நேரம் கிடைக்கவில்லை.

பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி. பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகளவில் நடக்கின்றன. உத்தரபிரதேச சிறுமி பலாத்காரம், மணிப்பூர் தெருக்களில் பெண்கள் நிர்வாணமாக்கியது, மல்யுத்தப் வீராங்கனைகள் பாஜக எம்பியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானது போன்ற குற்றங்களை கூற முடியும். பெண்களை அரசியல் லாபத்திற்கான கருவிகளாக பாஜக பயன்படுத்துகிறது’ என்றார்.

The post பிரதமரை மம்தா சந்தித்த நிலையில் லட்சத்தீவிற்கு ெசல்லும் மோடிக்கு மணிப்பூர் ெசல்ல நேரமில்லையா?: திரிணாமுல் தலைவர்கள் காட்டம் appeared first on Dinakaran.

Tags : Modi ,Lakshadweep ,Mamata ,Trinamool ,Kattam ,Kolkata ,Chief Minister ,Manipur ,West Bengal ,Hooghly ,
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி