×

புதுக்கோட்டை பழைய பேருந்துநிலையம் அருகே அரிவாளுடன் ஆஞ்சநேயர் கோயில் கருவறைக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பழைய பேருந்துநிலையம் அருகே அரிவாளுடன் ஆஞ்சநேயர் கோயில் கருவறைக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை பழைய பேருந்துநிலையம் அருகே உள்ள ஜெய வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் இன்று அந்த கோவிலுக்குள் அரிவாளுடன் இளைஞர் ஒருவர் இருப்பதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞரை வெளியே கொண்டுவர முயன்றபோது அந்த இளைஞர் காவல்துறையை அரிவாளை காட்டி கருவறைக்குள் இருந்தபடியே மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த காவல் துறையினர் கருவறைக்குள் உள்ள இளைஞரை மீட்க தீயணைப்பு துறையினரின் உதவியை நாடினர். பின்னர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அவர் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து அவரை வெளியே கொண்டுவர முயற்சித்தனர்.

இருப்பினும் அந்த இளைஞர் வெளியே வர மறுப்பு தெரிவித்தார். குறிப்பாக அந்த இளைஞர் புதுக்கோட்டை நகர பகுதிக்குட்பட்ட அசோக்நகரை சேர்ந்த வினோத் என்பதும் அவர் காதல் விவகாரத்தால் கருவறைக்குள் சென்றதும் அவருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தெரியவந்தது. இருப்பினும் அவரை சமரசம் செய்து அந்த இளைஞரை வெளியே கொண்டுவர முயற்சித்தனர். ஆனால் அந்த இளைஞர் வெளியே வர முயற்சி செய்பவர்களை உள்ளே செல்பவர்களையும் அவர் கையில் வைத்திருந்த அரிவாளை காட்டி மிரட்டி வந்துள்ளார்.

இதனால் அச்சமடைந்த காவல் துறையினரும், மீட்பு துறையினரும் உடனடியாக அவர் மீது தண்ணீர் பீச்சி அடித்து அவரை உள்ளே சென்று பிடிக்க வலையின் உதவியுடன் தற்போது ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அந்த இளைஞரை வெளியே கொண்டுவந்தனர். பின்னர் மனநல மருத்துவர்களையும் வரவழைத்து அவருக்கு ஆலோசனையும் வழங்கி வருகின்றனர். மேலும் சம்பவமறிந்து பொதுமக்கள் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

The post புதுக்கோட்டை பழைய பேருந்துநிலையம் அருகே அரிவாளுடன் ஆஞ்சநேயர் கோயில் கருவறைக்குள் நுழைந்த இளைஞரால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Anjaneyar temple ,Pudukottai ,Anjaneyar ,Temple ,Pudukottai Old Bus Stand ,Jaya Veera Anjaneyar Temple ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் தமிழ்...