×

திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி

சென்னை: திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நிர்வாகிகளுடன் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது,

*திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது.
*திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு மிக விரைவில் கையெழுத்தாகும்.
*திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதியாவதில் எந்த தாமதமும் இல்லை.
*திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை; கூட்டணி கட்சிகள் மகிழ்ச்சியோடு உள்ளோம்.
*காங்கிரஸ் அகில இந்திய தலைமையைக் கொண்டுள்ளதால் தொகுதிப் பங்கீடு பேச்சு தொலைபேசி மூலம் நடந்து வருகிறது.
*எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல் புரிந்துணர்வோடு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
*திரிணாமுல் காங்., ஆம் ஆத்மி, சிவசேனா, ஆர்.ஜே.டி. உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமையாது என்றார்கள், அங்கு கூட்டணியில் உள்ளோம்.
*தமிழ்நாட்டில் திமுக எங்களோடு மிக நட்பாக உள்ள கட்சி; இங்கு தொகுதிப் பங்கீட்டில் எந்த சிக்கலும் வராது. இவ்வாறு தெரிவித்தார்.

The post திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்து வருகிறது: செல்வப்பெருந்தகை பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,Selvaperunthakai ,Chennai ,Tamil Nadu ,Congress ,president ,Selvaperunthagai ,Lok Sabha ,Anna Vidyalaya, Chennai ,Dinakaran ,
× RELATED பாஜ தேர்தல் அறிக்கை தமாஷ்…செல்வப்பெருந்தகை விமர்சனம்