×

புயல் நடுவில் புல்லாங்குழல் ஓர் அபூர்வம்.. அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர்.. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!!!

சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கவிஞர் வைரமுத்து பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று 71வது பிறந்தநாள். இதையொட்டி, சென்னை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார். இதைத்தொடர்ந்து, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்கள், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், புயல் நடுவில் புல்லாங்குழல் ஓர் அபூர்வம் அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர் என்று தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கவிஞர் வைரமுத்து.

அந்த பதிவில்,

முதலமைச்சரைச் சந்தித்துப்
பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன்

சிறிதுநேரம்
தனிமையில் உரையாடினோம்

நிமிடமுள்ளின்
நிதானத்தில் பேசினார்

இடப் பங்கீட்டில்
அவரது கனிவும்
சூழ்நிலையின் கறார்த்தனமும்
தெளிவாய்த் தெரிந்தன

புயல் நடுவில்
புல்லாங்குழல்
ஓர் அபூர்வம்

அபூர்வங்களுள் ஒருவர்
முதல்வர்

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post புயல் நடுவில் புல்லாங்குழல் ஓர் அபூர்வம்.. அபூர்வங்களுள் ஒருவர் முதல்வர்.. கவிஞர் வைரமுத்து வாழ்த்து!!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Poet Vairamuthu ,Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,M. K. Stalin ,Chittaranjan Road, Chennai ,Vairamuthu ,
× RELATED வாக்கு என்பது நீங்கள் செலுத்தும்...