×

பாஜக குழுவினருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வ சந்திப்பாக அமைந்துள்ளது: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி

சென்னை: பாஜக குழுவினருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வ சந்திப்பாக அமைந்துள்ளதாக த.மா.கா. தலைவர் வாசன் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக – தமிழ் மாநில காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஜி.கே.வாசனுடன், பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஈரோடு, திருப்பூர், மயிலாடுதுறை, தஞ்சை உள்ளிட்ட 6 தொகுதிகளில் 4 தொகுதிகளை ஒதுக்க த.மா.கா. கோரிக்கை விடுத்துள்ளது. த.மா.கா. அலுவலகத்துக்கு நேரில் சென்று தொகுதி பங்கீடு குறித்து பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி வெற்றி பெற்று 3வது முறையாக ஆட்சியமைப்பார் என ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post பாஜக குழுவினருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வ சந்திப்பாக அமைந்துள்ளது: த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,DMK ,President ,GK Vasan ,CHENNAI ,Vasan ,Tamil State Congress ,Lok Sabha elections ,Pon Radhakrishnan ,Vanathi Srinivasan ,
× RELATED அண்ணாமலை மீது வழக்கு