×

மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வார்டுகள் புறக்கணிப்பு: ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் 3 வார்டுகளில் எந்த பணியும் செய்யாமல் புறக்கணிப்பதாக வழக்கு தொடரப்பட்டது. ஊராட்சி மன்ற கவுன்சிலர்களின் கோரிக்கை குறித்து மதுரை ஆட்சியர் நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. முதல்வரின் கிராம ஊராட்சி மேம்பாட்டு திட்டத்தில் எங்கள் பகுதிக்கு 57 பணிகள் செய்ய 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு நிர்வாக அனுமதி கொடுத்த ரூ.6 கோடி நிதியை ஊராட்சி மன்ற தலைவர் தன்னிச்சையாக செயல்படுத்தி வருகிறார் என மனுதாரர் தெரிவித்திருந்தார். சக்கிமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட 7, 8, 9 ஆகிய வார்டுகளை மட்டும் ஊராட்சி மன்றத் தலைவர் புறக்கணித்து வருகிறார் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

The post மதுரை மாவட்டம் சக்கி மங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் வார்டுகள் புறக்கணிப்பு: ஆட்சியருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,district ,Chakki Mangalam panchayat council ,Madurai district ,Chakki Mangalam panchayat ,High Court ,Madurai Collector ,Dinakaran ,
× RELATED மதுரை மாவட்டம் மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை!