×

பிரதமர் மோடி அறிவித்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் படுதோல்வி: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த மேக் இன் இந்தியா எனப்படும் இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தொழில் உற்பத்தித் துறைக்காக பெருமுழக்கத்துடன் மோடி அரசு அறிவித்த திட்டங்கள் எல்லாம் முற்றிலும் செயலற்றுப் போய்விட்டன. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஜிடிபியில் தொழில் உற்பத்தித் துறையின் பங்கு 16%-ல் இருந்து 13%-ஆக சரிந்தது ஏன்? என்றும், மோடி ஆட்சியில் தொழில் உற்பத்தித் துறையின் சராசரி வளர்ச்சி சரிந்தது ஏன்? என்றும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 7.85% ஆக  இருந்த தொழில் உற்பத்தித் துறையின் சராசரி வளர்ச்சி, மோடி ஆட்சியில் 6%-ஆக சரிந்தது ஏன்? என்றும் கார்கே சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.

 

The post பிரதமர் மோடி அறிவித்த ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் படுதோல்வி: மல்லிகார்ஜுன கார்கே appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Mallikarjuna Kharge ,Delhi ,Congress ,Modi ,Modi government ,Dinakaran ,
× RELATED தேர்தல் அறிக்கையில் வார்த்தை ஜால...