×

தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85-ஆக உயர்வு!

 

டெல்லி: தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 80 வயதானவர்கள் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க கடந்த தேர்தலில் அனுமதி அளிக்கப்பட்டது. முதியோருக்கான வயது வரம்பை உயர்த்தி ஒன்றிய அரசின் சட்ட அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துடன் ஆலோசனை நடத்திய பின் வயது வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது முதியோர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

 

The post தபால் வாக்கு மூலம் முதியோர் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 85-ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Ministry of Law of the State of the Union ,
× RELATED சிறையில் இருந்து ஆட்சி நடத்த...