×

கூட்டுறவுத் துறை சார்பில் இன்று சிறப்பு கடன் தீர்வு முகாம்: மண்டல இணைப்பதிவாளர் தகவல்

 

தேனி, மார்ச் 2: தேனி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் இன்று நடத்தப்பட உள்ளதாக தேனி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்தார். அவர் கூறியதாவது: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2023-2024 ம் ஆண்டு கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கையின் போது, கூட்டுறவுச் சங்கங்களில் வசூலாகாமல் நிலுவையில் உள்ள தவணை தவறிய பண்ணை சாராக்கடன்கள் மற்றும் இதர நீண்ட காலக்கடன்களை தீர்வு செய்ய சிறப்பு கடன் தீர்வு திட்டம் செயல்படுத்தப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து அரசாணை வெளியிடப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்திட்டத்தை உறுப்பினர்கள் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இன்று (2ம் தேதி) தேனி மாவட்டத்தில் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடத்தப்பட உள்ளது. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு கடன் சங்கங்கள்,

தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் ஆகிய கூட்டுறவு சங்கங்களின் அலுவலக வளாகத்தில் சிறப்பு கடன் தீர்வு திட்ட முகாம் நடக்கிறது. எனவே கூட்டுறவுச் சங்கங்களில் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் நீண்டகாலமாக நிலுவை வைத்துள்ள கடன்தாரர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் கூறினார்.

The post கூட்டுறவுத் துறை சார்பில் இன்று சிறப்பு கடன் தீர்வு முகாம்: மண்டல இணைப்பதிவாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Special ,Settlement Camp ,Cooperative Department ,Zonal Coordinator Information ,Theni ,Theni District ,Co-operative Societies ,Coordinator ,Arogya Sukumar ,Tamil Nadu Legislative Assembly ,Special Debt Settlement Camp ,Dinakaran ,
× RELATED திருச்சி சிறப்பு முகாமில் இருந்த...