×

கே.கே.புதூர் பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கமிஷனரிடம் மனு

 

கோவை, மார்ச் 2: கோவை கே.கே.புதூர் பழனிக்கோனார் வீதியை சேர்ந்த பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர். மனுவில், ‘‘சாய்பாபாகாலனி கே.கே.புதூர் பழனிக்கோனார் வீதியில் பள்ளி, மருத்துவமனை, மகப்பேறு மருத்துவமனை இயங்கி வருகிறது. எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது.

இதில், குழந்தைகள், வயதானவர்கள், நோயாளிகள் உள்ளனர். இந்நிலையில், தற்போது அருகே உள்ள ஜீவா நகர் பகுதியில் கோவை மாநகராட்சியால் குப்பை கிடங்கு அமைக்க போவதாக தகவல் கிடைத்துள்ளது. இப்பகுதியில் குப்பை கிடங்கை அமைத்தால் சுற்றுப்புற சூழலு் கடுமையாக பாதிக்கப்படும். பொதுமக்களும் பாதிக்கப்படுவர். ஏற்கனவே, தற்போது குப்பைகளை அப்பகுதியில் கொட்டி வருகின்றனர். இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. ஜீவா நகர் பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

The post கே.கே.புதூர் பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கமிஷனரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : KK Pudur ,Coimbatore ,KK Putur Palanikonar Road ,Saibabakalani KK Putur Palanikonar road ,KK Putur ,Dinakaran ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...