×

திருச்சி மாணவி மாயம் ‘இன்ஸ்டாகிராம்’வாலிபருக்கு வலை

 

திருச்சி, மார்ச் 2: திருச்சியில் பள்ளி மாணவி மாயமான வழக்கில், சென்னையை சேர்ந்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி பாலக்கரையை சேர்ந்த 17 வயது சிறுமி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இவர் கடந்த 28ம் தேதி ஆலயத்துக்கு செல்வதாக கூறிச் சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் அளித்த புகாரின்பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் சிறுமியுடன் சென்னையை சேர்ந்த வாலிபர் இன்டாகிராமில் பழகி வந்தது தெரியவந்தது. இதனால் அவர் கடத்தி சென்றிருக்கலாம் என சந்தேகத்தில் போலீசார் அவரையும், சிறுமியையும் தேடிவருகின்றனர்.

The post திருச்சி மாணவி மாயம் ‘இன்ஸ்டாகிராம்’வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Mayam ,Instagram ,Chennai ,Palakkarai ,Dinakaran ,
× RELATED தனியார் நிறுவன ஊழியர் மாயம்