×

பொன்னமராவதி அருகே சேரனூர் ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

 

பொன்னமராவதி, மார்ச் 2: பொன்னமராவதி அருகே சேரனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.சேரனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளி முதலாமாண்டு ஆண்டு விழாவிற்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் ராமதிலகம்,இலாஹிஜான், தலைமையாசிரியர் ராஜகுமாரி ஆகியோர் தலைமை தாங்கினர். வட்டார வள மேற்பார்வையாளர் சிவக்குமார்,சேரனூர் ஊராட்சி மன்றத்தலைவர் காமராஜ்,ஊர் முக்கியஸ்தர் மிராசு சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வட்டார வள ஆசிரியர் பயிற்றுனர் யசோதா,இடைநிலை ஆசிரியை சூர்யா ஆகியோர் வரவேற்றனர்.ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாமிக்கண்ணு,வார்டு உறுப்பினர் சதீஷ்குமார்,தேவராஜன் முத்துக்கண்ணு ஆகியோர் வாழ்த்தி பேசினா்.தலைமையாசிரியர் ராஜகுமாரி ஆண்டறிக்கையை வாசித்தார்.விழாவில் பரத நாட்டியம், மாணவ, மாணவிகளின் நடனம், பாட்டு மன்றம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.

விளையாட்டு போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் சேரனூர் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள், இல்லம் தேடி தன்னார்வலர்கள்,முன்னாள் இந்நாள் புரவலர்கள்,முன்னாள் மாணவர்கள்,ஊர் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

The post பொன்னமராவதி அருகே சேரனூர் ஒன்றிய பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Charanur Union School Anniversary ,Ponnamaravati ,Cheranur Panchayat Union ,Primary ,School ,Ponnamaravathi ,Ramathilagam ,Ilahijan ,Principal ,Rajakumari ,Cheranur Panchayat Union Primary School ,Vattara Vala… ,Charanur Union School Annual Celebration ,Dinakaran ,
× RELATED பொன்னமராவதியில் மின் சாதனங்கள் பழுது நீக்கும் கடையில் தீ