×

ெசன்னை திமுக பிரமுகர் கொலை குற்றவாளிகளை வேலூரில் தேடிய போலீஸ் கோட்டையில் செல்போன் டவர் சிக்னல் காட்டியதால்

வேலூர், மார்ச் 2: கோட்டையில் செல்போன் டவர் சிக்னல் காட்டியதால் சென்னை திமுக பிரமுகர் கொலை குற்றவாளிகளை போலீசார் வேலூரில் பல்வேறு இடங்களில் தேடினர். சென்னை வண்டலூரைச் சேர்ந்தவர் ஆராமுதன்(56), இவர் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளராகவும், துணை சேர்மேனாகவும் உள்ளார். இந்நிலையில் வண்டலூர் மேம்பாலம் அருகே காரில் இருந்து இறங்கும்போது ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, ஆராமுதனை சரமாரியாக வெட்டி கொலை செய்தது. இந்நிலையில் இந்த கொலை குற்றவாளிகள் வேலூர் கோர்டில் சரணடைய உள்ளதாக தகவல் கிடைத்தது. மேலும் வேலூர்கோட்டையில் குற்றவாளிகளின் செல்போன் டவர் காட்டியுள்ளது. இதையடுத்து சென்னை போலீசார், வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வேலூர் கோர்டுக்கு வந்த கார்கள் மற்றும் கோட்டையில் தேடி வந்தனர். இதற்கிடையே குற்றவாளிகள் சத்தியமங்களத்தில் சரணடைந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வழக்கமான பணிக்கு திரும்பியதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ெசன்னை திமுக பிரமுகர் கொலை குற்றவாளிகளை வேலூரில் தேடிய போலீஸ் கோட்டையில் செல்போன் டவர் சிக்னல் காட்டியதால் appeared first on Dinakaran.

Tags : DMK ,Vellore ,Aramudhan ,Vandalur, Chennai ,vice-chairman ,Kattangolatur North Union ,
× RELATED ஒருபோதும் தேசிய கட்சிகளுக்கு மக்கள்...