×

கிணற்றில் 2 மணி நேரம் தத்தளித்த விவசாயி தீயணைப்பு துறையினர் மீட்டனர் பெரணமல்லூர் அருகே 50 அடி ஆழமுள்ள

பெரணமல்லூர், மார்ச் 2: பெரணமல்லூர் அருகே கிணற்றில் 2 மணி நேரம் தத்தளித்துக்கொண்டிருந்த விவசாயியை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர். பெரணமல்லூர் அடுத்த சோழவரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி(64), விவசாயி. இவர் நேற்று தனக்கு சொந்தமான 50 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் உள்ள நீர்மூழ்கிக் மோட்டார் பம்பினை சரி செய்ய கயிறு மூலம் கட்டி மேலே இழுக்க முயன்றார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்துள்ளார். கிணற்றில் முறையாக படி வசதி இல்லாததால் அவர் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தார். இதுகுறித்து அவரது மகன் பெரணமல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதனடிப்படையில், தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் ஜோதி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் 2 மணிநேரமாக தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த விவசாயி சுப்பிரமணியை நீண்ட போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post கிணற்றில் 2 மணி நேரம் தத்தளித்த விவசாயி தீயணைப்பு துறையினர் மீட்டனர் பெரணமல்லூர் அருகே 50 அடி ஆழமுள்ள appeared first on Dinakaran.

Tags : fire department ,Peranamallur ,fire ,Subramani ,Cholavaram ,department ,Dinakaran ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு