×

சோளக்காட்டில் தீவிபத்து

கெங்கவல்லி, மார்ச் 2: வீரகனூர் அருகே நல்லூர் சாலையைச் சேர்ந்தவர் அங்கமுத்து மகன் சந்தோஷ்குமார். இவர் சொந்தமான விவசாய தோட்டத்தில், ஒரு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மக்காச்சோளம் அறுவடை செய்யப்பட்டு நிலையில், நேற்று மக்காச்சோள கழிவுகளுக்கு தீ வைத்தனர். அப்போது திடீரென காற்று வேகமாக வீசியதால், அருகில் உள்ள தோட்டத்திற்கும் தீ பரவியது. இதுகுறித்து சந்தோஷ்குமார் கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் ரமேஷ் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீப்பற்றி எரிந்த சோளக்காட்டை தண்ணீரை பீய்ச்சியடித்த தீயை அணைத்தனர். தீவிபத்து குறித்து வீரகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post சோளக்காட்டில் தீவிபத்து appeared first on Dinakaran.

Tags : Kengavalli ,Angamuthu ,Santoshkumar ,Nallur Road ,Weeraganur ,Solakatil Divipattu ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்