×

சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம்

ஆத்தூர், மார்ச் 2: ஆத்தூர் ஒன்றியம், பைத்தூர் மலை கிராமத்தில் 1வது வார்டு அண்ணா குட்டை பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடம்பூர் சாலையில் இருந்து, பைத்தூர் செல்லும் சாலையை சீரமைக்க, கடந்தாண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பணிகள் முழுமை அடையாததால் மேடு பள்ளமாக உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. இந்த சாலையை சீரமைத்து தருமாறு, பலமுறை கோரிக்கை வைத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 100க்கும் மேற்பட்டோர், அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Athur ,1st Ward Anna Kuttai ,Baithur Hill Village, ,Athur Union ,Kadampur ,Baithur ,Dinakaran ,
× RELATED டூவீலர் மீது பிக்கப் வேன் மோதியதில் 2 பேர் காயம்