×

விபத்தில் 6 பேர் பலி

நெல்லை: நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகே உள்ள ஸ்ரீரங்கராஜபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (27). மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அவினாப்பேரியை சேர்ந்தவர் மாலைராஜா (20), சண்முகவேல் (18). இருவரும் சகோதரர்கள். இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் நாங்குநேரி பகுதியில் உணவருந்தி விட்டு, நெடுங்குளம் நோக்கி ஒரே பைக்கில் சென்றனர். அப்போது நெல்லையில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற சொகுசு கார், பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் மகேஷ், மாலைராஜா, சண்முகவேல் ஆகிய 3 பேரும் இறந்தனர்.

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அணலை கிராமம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுசீலா (60). இவருக்கு நேற்றுமுன்தினம் இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரது மகன் சரவணன் (38), அதே தெருவை சேர்ந்த அரவிந்தன் (34) என்பவரது ஆட்டோவில் பேட்டவாய்த்தலை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு சிகிச்சை முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது பேட்டவாய்த்தலை சக்திநகர் அருகே வந்தபோது எதிரே காரைக்காலில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக ஆட்டோ மீது மோதி அருகில் உள்ள அய்யன்வாய்க்காலில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த சுசீலா, அவரது மகன் சரவணன் மற்றும் ஆட்டோ டிரைவர் அரவிந்தன் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.

The post விபத்தில் 6 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Mahesh ,Srirangarajapuram ,Nella district, Nanguneri ,Malairaja ,Sanmukavel ,Avinaperi ,Mulikaripatti ,Nanguneri ,Dinakaran ,
× RELATED வெற்றிலை பாக்கு இலவசம் எனக்கூறி...