×

ரயில் விபத்தை தவிர்த்த தம்பதிக்கு ரயில்வே பரிசு

செங்கோட்டை: செங்கோட்டையை அடுத்த புளியரை பகுதியில் கடந்த 25ம் தேதி அதிகாலை சுமார் 1 மணிக்கு 20 மீட்டர் உயர மலைப்பாதையில் பிளைவுட் பலகைகள் ஏற்றப்பட்ட லாரி சென்று கொண்டிருந்தது. திடீரென இந்த லாரி மலை பாதையில் இருந்து கவிழ்ந்து உருண்டு அருகில் உள்ள ரயில் பாதையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வந்த ரயிலை அருகில் வசித்து வந்த தம்பதி சண்முகையா, வடக்கத்தியாள் தம்பதி டார்ச் லைட் அடித்து நிறுத்தினர். தம்பதியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், தம்பதியினரை நேரில் அழைத்து ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்நிலையில் நேற்று மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா, புளியரையில் உள்ள வீட்டிற்கு சென்று அந்த தம்பதியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். பின்பு பகவதிபுரம் ரயில் நிலையத்தில் நடந்த பாராட்டு விழாவில் தம்பதியருக்கு பாராட்டு சான்றிதழும் ரொக்க பரிசும் வழங்கி கவுரவித்தார்.

The post ரயில் விபத்தை தவிர்த்த தம்பதிக்கு ரயில்வே பரிசு appeared first on Dinakaran.

Tags : Sengottai ,Puliyarai ,Dinakaran ,
× RELATED சட்ட விழிப்புணர்வு முகாம்